ஐ.பி.எல் தொடரில் நாங்கள் விளையாட எங்களது கோரிக்கையை ஏற்கவேண்டும் – பி.சி.சி.ஐ க்கு வேண்டுகோள் வைத்த வெளிநாட்டு வீரர்கள்

Forign

ஐபிஎல் தொடரில் இன்னும் சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக துவங்குகிறது. செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடக்கிறது மொத்தமுள்ள 60 போட்டிகளும் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடைபெறுகிறது. வழக்கமாக ஐபிஎல் தொடரின் அட்டவணை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும்.

ipl

ஆனால் இந்த முறை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தான் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பலர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு ஏற்றவாறு அட்டவணையை தயாரிக்க தான் நேரம் எடுத்துக்கொண்டு பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் வீரர் பயிற்சியாளர் என யாராக இருந்தாலும் துபாய் வந்த பின்னர் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அதன் பின்னர்தான் அந்த உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் வரமுடியும். தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கடைசி போட்டி நடைபெற்று முடிந்தவுடன் ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டீவன் ஸ்மித் போன்ற வீரர்கள் துபாய் வந்து சேருவார்கள்.

Smith-1

ஆனால் ஆறு நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டால் முதல் சில போட்டிகளில் இவர்களால் ஆட முடியாது. இதன் காரணமாக 6 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை இருந்தால் தாங்களும் முதல் போட்டியில் இருந்து விளையாடுவோம் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் பி.சி.சி.ஐ க்கு வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்துள்ளார்கள்.

- Advertisement -

stokes

ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் தான் நடைபெறுகிறது. இதன் காரணமாக அவர்களும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.