பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் திருமணம் என்பது ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பான செய்தியாக அமையும். அதிலும் காதல் திருமணம் என்றால் கூடுதல் வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும் இந்நிலையில் தற்போது இந்த செய்தி அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக உள்ளது அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா ?
Off spin sensation @Mujeeb_R88 got engaged.
Congratulations bro and wish u best of luck for ur new & exiting life ahead.— M.ibrahim Momand (@IbrahimReporter) October 28, 2019
அது யாதெனில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 18 வயது வீரர் ஒருவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முஜிபுர் ரகுமானுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மேலும் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதனை அவரது தரப்பிலும் உறுதி செய்துள்ளனர்.
18 வயதாகும் முஜிபுர் ரகுமான் ஆப்கானிஸ்தான் அணிக்காக 2017 ஆம் ஆண்டு 16 வயதில் அறிமுகமானார். மேலும் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 13 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தும் வருகிறார்.
இவர் புதிய பந்தில் சிறப்பாக வீசும் திறமை உடையவர் மேலும் தனது சிறப்பான சுழற்பந்து மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கும் சவால் விட்டு வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.