பி.சி.சி.ஐ எந்த வேண்டுகோளையும் எங்களிடம் வைக்கல. ஐ.பி.எல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – இங்கிலாந்து

IPL
- Advertisement -

கொரானா பரவலின் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, பாதியில் நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில் ஐக்கிய அமீரகம் அல்லது இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டம் வகுத்திருப்பதாக தகவல் வெளிவந்தன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தள்ளி வைத்துவிட்டு, அந்த கால இடைவெளியில் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம் வகுத்திருப்பதாகவும், இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்துடன் பிசிசிஐ மறைமுக பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வந்தது.

ipl

- Advertisement -

இப்படி சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த செய்தியைக் கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், தாமகவே முன் வந்து இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம், நாங்கள் பிசிசிஐயுடன் எப்போதுமே தொடர்பில் இருந்து வருகிறோம், அதில் நாங்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது கொரானா பரவலின் தாக்கங்கள் எப்படி இருக்கும், அதை கையாள்வது எப்படி என்பதைப் பற்றிதான் பேசி வருகிறோம்.

அதற்கு மாறாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை தள்ளி வைப்பதை பற்றி பிசிசிஐ எந்த பேச்சு வார்த்தையையும் எங்களுடன் நடத்தவில்லை. எனவே ஐந்து டெஸ்ட் போட்டிகளும் குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். இப்படி சமூக வலைத்தள ஊடகங்கள் பரப்பிய வதந்திக்கு இங்கிலாந்து கிரக்கெட் நிர்வாகம் தனது அறிக்கையின் மூலம் முற்று புள்ளி வைத்ததது.

BCCI

அதன் பிறகும்கூட சில ஊடகங்கள், செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ஜூலை மாதத்தின் இறுதியிலேயே நடத்துவதால், எஞ்சியருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த செப்டம்பர் மாதத்தில் அதிக நாட்கள் கிடைக்கும் என்பதால், ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ஜூலை மாதத்தின் இறுதியிலேயே நடத்திக் கொள்ளலாம் என, பிசிசிஐ மீண்டும் இங்கிலாந்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது என்ற செய்தியை வெளியிட்டன. இந்த வதந்திக்கும் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

INDvsENG

ஜூலை மாத இறுதியில் இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் என்ற கிரக்கெட் தொடர் நடைபெற இருப்பதால்தான், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. 60 போட்டிகள் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடரில் தற்போது வரை 29 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. எஞ்சியிருக்கும் 31 போட்டிகள் நடைபெறாமல் போனால், பிசிசிஐக்கு 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement