வாவ்..செம்ம..ஒரே போட்டியில் இரண்டு சாகசம்…தேன் பூச்சி செய்த சில்மிஷம் ! – வைரலாகும் வீடியோ

kock
- Advertisement -

ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெயின் அடித்த பந்தை தென்ஆப்பிரிக்க வீரரான டியான் எல்கர் பறந்து பிடித்த கேட்ச் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே மூன்று டெஸ்ட்போட்டிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது.

- Advertisement -

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியும் வென்றுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்னும் முனைப்பில் தென்ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகின்றது.நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் டிம்பெய்ன் 62 ரன்கள் எடுத்திருந்தபோது தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கியத்தார்.

ஆனால் பந்து மேலே உயர்ந்து சிக்ஸருக்கு செல்லாமல் அதற்கு முன்னதாகவே தரையை நோக்கி விழ தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர் டியான் எல்கர் பின்னோக்கி வேகமாக ஓடிவந்து பந்து தரையில் விழுவதற்கு சிலநொடிகளுக்கு முன்னர் பாய்ந்து அற்புதமாக கேட்ச் பிடித்துள்ளார்.தென்ஆப்பிரிக்க வீரர் பிடித்த அற்புதமான கேட்சை பாராட்டி கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கோரி நோரிஸ் என்கிற செய்தியாளர் “வாவ் இதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கேட்ச்” என்று டியான் எல்கரை டிவிட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். டிம்பெய்ன் அடித்து டியான் எல்கர் பிடித்த அந்த அற்புதமான கேட்ச் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.முன்னதாக இந்த தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு சோதனை மேல் சோதனை வந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்டில் வார்னரின் மனைவியை தென்ஆப்பிரிக்கர்கள் கிண்டல் செய்தது, மூன்றாவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தி மூன்று வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது என இந்த தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு மறக்கமுடியாத தொடராக அமைந்துள்ளது.

Advertisement