அண்டர்-19 உலகக் கோப்பை 2024 : அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.. நடப்பு சாம்பியன் இந்தியாவின் போட்டிகள்

Under 19 World Cup India
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அசத்தப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறிந்து கொடுப்பதற்காக ஐசிசி நடத்தி வரும் அண்டர்-19 உலகக்கோப்பை அடுத்ததாக 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 2024 ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை இத்தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. சொல்லப்போனால் முதலில் இத்தொடர் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இலங்கை வாரியம் தடை பெற்றதால் இந்த உலகக்கோப்பை தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் டாப் 16 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக ஃபைனல் உட்பட 41 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:
இந்நிலையில் இத்தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நேபாள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 16 அணிகள் இத்தொடரில் விளையாட உள்ளன.

இந்த 16 அணிகளில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் குரூப் டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

- Advertisement -

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணியின் 3 லீக் சுற்று போட்டிகளின் அட்டவணை:
1. ஜனவரி 20, சனிக்கிழமை : இந்தியா – வங்காளதேசம், ப்ளூம்போய்ண்டன்
2. ஜனவரி 25, வியாழக்கிழமை : இந்தியா – அயர்லாந்து, ப்ளூம்போய்ண்டன்
3. ஜனவரி 28 ஞாயிற்றுக்கிழமை : இந்தியா – அமெரிக்கா, ப்ளூம்போய்ண்டன்

இதையும் படிங்க: அவரோட கைகள கட்டவே முடியாது.. இந்த பையன் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவாரு.. கவாஸ்கர் நம்பிக்கை

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் முறையாக முகமது கைஃப் தலைமையில் இந்த உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் 2008இல் விராட் கோலி தலைமையிலும் 2012இல் உமுக்த் சந்த் தலைமையிலும் 2018இல் பிரிதிவி ஷா தலைமையிலும் 2022இல் யாஷ் துள் தலைமையிலும் வென்றது. அந்த வகையில் மொத்தம் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. அந்த வரிசையில் இம்முறை 6வது கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement