மிஸ் இந்திய பெண்ணுடன் காதல் வலையில் சிக்கினாரா ப்ராவோ ..! வெளிவந்த உண்மை – புகைப்படம் உள்ளே

Bravo

11வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட பரபரப்பாக இந்த ஐபிஎல் சீசனில் பல்வேறு விசயங்கள் நடந்துவருகின்றன.அந்தவகையில் சென்னை அணியின் பிராவோ, மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடாஷா சுரியுடன் டேட்டிங் செய்த படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை எழுப்பியுள்ளது.கடந்த ஐபிஎல் சீசன்களில் விராட்கோலியின் காதலியாக இருந்த அனுஷ்கா சர்மா கோலி விளையாடும் ஒருபோட்டியை கூட விடாமல் மைதானத்திற்கு வந்து பார்ப்பார்.

natasha

அப்போது இருவரைப்பற்றிய பல கிசுகிசுக்கள் எழுந்தபோது முதலில் இருவரும் மறுத்தபோதிலும் பின்னாட்களில் இருவரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.அந்தவரிசையில் தற்போது சென்னை அணியின் வீரர் டுவைன் பிராவோ மற்றும் நடாஷா ஜோடி பற்றிய பல கிசுகிசுக்களும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி கிரிக்கெட் மற்றும் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பத்தாண்டுகளுக்கு முன்னர் மும்பையில் முதன்முறையாக பிராவோவும் நடாஷாவும் சந்தித்ததாகவும் அன்றுமுதல் இன்றுவரையில் இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு தொடர்வதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெப் சீரிஸில் “இன்சைட் ஆப் எட்ஜ்” என்கிற தொடரில் நடித்துவரும் நடாஷா கடந்த புதன்கிழமை அன்று மும்பையிலுள்ள ஒரு காபி ஷாப்பில் பிராவோவை சந்தித்து அதிகநேரம் செலவிட்டுள்ளாராம். முன்னதாக நடாஷா சென்னை அணிக்கும் பிராவோவிற்கும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.அதன்பின்னர் கடந்த புதன்கிழமை மும்பையில் நடந்த சென்னை – மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியை காண வான்கடே மைதானத்திற்கு வந்திருந்தார் நடாஷா.

- Advertisement -

விஐபிகள் அமரும் பகுதியில் அமர்ந்து போட்டியை ரசித்த நடாஷா போட்டி முடிந்தபின்னர்பிராவோவுடன் எடுத்திருந்த புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு பிராவோவிற்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்திருந்தார்.இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று தெரிவித்தாலும் ரசிகர்கள் அதெல்லாம் இல்லை அதற்கும் மேல் இருவருக்குள்ளும் வேறு ஏதோவொன்று இருப்பதாக பலமாக நம்புகின்றனர்.

Advertisement