தோனிக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் – டுவைன் பிராவோ ஓபன் டாக்

Bravo

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? நடைபெறாதா ? என்ற சந்தேகம் இருந்த போது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளதால் ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

raina

மேலும் சில ஆண்டுகள் தோனி சிஎஸ்கே அணிக்காக கேப்டனாக செயல்பட வேண்டும் என்றும் தங்களது எதிர்பார்ப்பினை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தோனி குறித்து பல்வேறு செய்திகள் பல வீரர்கள் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தோனியின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கே அணியின் சக வீரருமான பிராவோ தோனியின் கேப்டன்சி குறித்தும் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதில் : சிஎஸ்கே வின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து தோனியின் மனதில் நிச்சயம் ஒரு முடிவு இருக்கும். எல்லாருமே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகும் நேரம் வரும் அப்படி விலகும் நேரம் வரும் பொழுது தோனி தனது கேப்டன் பொறுப்பை ரெய்னாவிடமோ அல்லது இளம் வீரர் ஒரு வருடமும் ஒப்படைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் : சிஎஸ்கே அணியின் பலமே அந்த அணியை சார்ந்திருக்கும் ரசிகர்கள்தான். ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுதான். சிஎஸ்கே இவ்வளவு பலம் வாய்ந்த அணியாகவும், உச்சத்தில் இருப்பதற்கும் ரசிகர்கள் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

raina

ஆனால் ரசிகர்கள் சில ஆண்டுகள் அதாவது இரண்டு ஆண்டுகளாக கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாட வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தோனி இரண்டாண்டுகள் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடுவார் தெரிவித்துள்ளது. இருப்பினும் தோனி மனதில் என்ன இருக்கிறது அவருக்கு மட்டுமே தெரியும் என்பது மறுக்க முடியாத உண்மை.