அஷ்வினின் சாதனையை முறியடிக்கவுள்ள பிராவோ. சி.எஸ்.கே அணிக்காக வலராறு படைக்க வெயிட்டிங் – விவரம் இதோ

Bravo
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் எப்போதும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே பதிமூன்றாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெரிய ஏதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்க உள்ளது.

csk-vs-mi

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ அஸ்வினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். அதாவது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 120 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 121 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார்.

அதேசமயம் 103 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி உள்ள பிராவோ 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் இன்னும் 3 விக்கெட்டுகளை பிராவோ விழ்த்தும் பட்சத்தில் சென்னை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வினிடமிருந்து பிராவோ முறியடிப்பார். மொத்தமாக 134 போட்டிகளில் அறிவியலுக்காக விளையாடியிருக்கும் பிராவோ 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ashwin 1

மேலும் 2013 ஆம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்பதற்காக நீல நிற தொப்பையையும் அவர் வென்றிருக்கிறார். சென்னை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்கும் பிராவோ எப்போதும் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் வெற்றிக்கு பெரிதளவு உதவியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 19 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அண்மையில் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை வீழ்த்தி இமாலய சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement