ஒரு ஓவருக்கு ஒரு ஜெர்சி…! கலர் கலரா ஜெர்சி வைத்துருக்கும் பிராவோ..! கலாய்க்கும் ரசிகர்கள்..! – காரணம் இதுதான்..?

மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ஆல் ரௌண்டர்களில் பிராவோ ஒரு முக்கிய வீரராக இருப்பவர். வேக பந்து வீச்சாளரான பிராவோ பேட்டிங் மற்றும் பீல்ட்டிங்கில் கூட சிறப்பான ஆட்டக்காரராகவே திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடியதன் மூலம் இந்திய ரசிகர்களின் அபிமானதயும் பெற்றார்.
dwayne
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடி வரும் பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள் 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளையளும் விளையாடியுள்ளார். அதே போல ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் பிராவோ 122 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கனடா நாட்டில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரிலும் பங்குபெற்று வருகிறார்.

இந்த தொடர் மட்டுமல்லாமல் இதுவரை ஆஸ்திரேலியாவின் சிட்னி , கனடாவின் வின்னிபெக் ஹாக்ஸ், பாகிஸ் தானின் லாகூர் காலண்டர்ஸ்,இங்கிலாந்தின் மிடிலெக்ஸ் போன்ற 20 அணிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இதனால் பல வண்ண வண்ண ஜெர்சிகளை வைத்திருக்கிறார் பிராவோ. இதனால் சகா வீரர்கள் இருபது என்பது ஓவர் தான், அணி கிடையாது என்று கிண்டல் செய்து வருகின்றனராம்.
bravo
டி20 போட்டியின் சிறப்பான வீரராக இருந்து வந்தாலும் சில காலமாக இவருக்கு மேற்கிந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு தான் வருகிறது . இதுவரை 66 சர்வேதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 1142 ரன்களை குவித்துள்ளார். மேலும், 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் பிராவோ.