எனது ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறேன். நான் இன்னும் விளையாட வேண்டி இருக்கிறது – மே.இ வீரர் தடாலடி

Wi-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டு வருகிறார். முக்கிய முன்னணி வீரர்கள் இல்லாமல் அந்த அணி இந்திய அணியிடம் சிக்கி தடுமாறி வருகிறது.

wi 1

கெயில்,ரசல் மற்றும் பிராவோ போன்ற வீரர்கள் இருந்திருந்தால் டி20 வரிசையில் அந்த அணி பலமான அணியாக இருந்திருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி அவ்வாறு பலமான வீரர்களை கொண்டிருந்தபோது இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான வீரர்களை அனைத்து அணிகளும் தயார் செய்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி நட்சத்திர வீரர் பிராவோ மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பதாகவும் எனவே டி20 உலகக் கோப்பைக்காக நான் தயார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று உள்ள பிராவோ நான் டி20 உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

bravo

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் அவரை அணியில் எடுப்பது என்பது கேள்விக்குறிதான் ஏனெனில் சீனியர் வீரரான அவர் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் இருந்தாலும் தற்போது விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அவரை தேர்வு செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. மேலும் நீண்ட நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட அவள் திடீரென வாய்ப்பு கொடுப்பது கடினம் தான்.

Bravo

எனவே அவர் ஓய்வு முடிவை திரும்ப பெற்றாலும் அணியில் இணைவாரா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். பிராவோ டி20 போட்டிகளை பொறுத்தமட்டில் ஈடுயினை இல்லாத வீரர் என்றே கூறவேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தும் திறமை இவரிடம் உண்டு. சென்னை அணிக்காக இவர் ஐ.பி.எல் போட்டிகளில் பல ஆண்டுகளாக முக்கிய வீரராக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement