தோற்றாலும் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிடின் கவனத்தை ஈர்த்த இலங்கை பவுலர் – யார் தெரியுமா ?

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக டிராவிடும் செயல்படுவதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியிலும் அதிகம் இருந்தது.

dravid

- Advertisement -

ஏனெனில் தனது சிறப்பான பயிற்சியின் மூலம் இந்திய under-19 அணியில் இருந்து பல வீரர்களை சர்வதேச தரத்தில் உருவாக்கி இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட். அவரது பயிற்சியின் கீழ் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்ற பல்வேறு வீரர்கள் இந்திய அணிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது பயிற்சியின் கீழ் தற்போது இந்திய அணி இலங்கை தொடரில் விளையாடி வருவதால் இந்த தொடரில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் ? மேலும் இந்த தொடரில் ராகுல் டிராவிடின் கவனத்தை ஈர்க்கப்போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Dravid

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்து மூன்றாவது போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிராவிட் இந்திய வீரர்களின் செயல்பாடு குறித்து பேசியது மட்டுமின்றி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

cha 1

அவர் குறிப்பிட்ட அந்த வீரர் யாரெனில் துஷ்மந்தா சமீரா என்ற வேகப்பந்துவீச்சாளர் தான். நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் அவர் விக்கெட்டை வீழ்த்தும் இல்லை என்றாலும் அவருடைய பவுலிங்கில் உள்ள திறனை கண்டு டிராவிட் வியந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement