NZ vs RSA : எங்களின் தோல்விக்கு இதுவே பெரிய காரணம் – டூபிளிஸ்சிஸ்

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Duplissis
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதின.

nz vs sa

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டி முடிந்து பேட்டியளித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் கூறியதாவது : நாங்கள் 260 ரன்கள் வரை அடிக்க திட்டமிட்டிருந்தோம். 260 ரன்கள் என்பது இந்த மைதானத்தின் வெற்றிக்கு போதுமான ரன்களாகும். மேலும் 270 எடுத்திருந்தால் அது வெற்றிக்கு பிரமாதமான இலக்காக இருந்து இருக்கும்.

Williamson

தனியாக ஒரு பேட்ஸ்மேன் இந்த போட்டியை எடுத்துச் செல்ல முடியும் அதனை நிரூபித்துள்ளார் வில்லியம்சன். மேலும் ஒருவர் சதம் அடித்தால் அது சேஸிங்கில் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை இந்த போட்டியில் நீங்கள் புரிந்து கொள்ளலாம். வில்லியம்சனின் ஆட்டம் அவர்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது மேலும் எங்களிடம் இருந்து ஆட்டத்தையும் பறித்து எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. என்று டூபிளிஸ்சிஸ் கூறினார்.

Advertisement