இவர் இப்படி ஆடினால் நாங்கள் எப்படி வெற்றி பெறுவோம் – டூபிளிஸ்சிஸ் புலம்பல்

Faf
- Advertisement -

இந்தியா மற்றும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் இன்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய முதலில் அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Ind

- Advertisement -

பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தென்ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் கொடுக்க நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கோலி தேர்வுசெய்யப்பட்டார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் கூறியதாவது :முதல் இன்னிங்சில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். முதல் இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் முக்கியமான ஒன்று அதுவும் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடினால் மனதளவில் நாங்கள் வலுவை இழந்து விட்டோம்.

Kohli 4

மேலும் இந்த அளவுக்கு பெரிய ஸ்கோரை அவர்கள் குவித்தபின் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது எங்களுக்கு மனநிலை வேறுபட்டு இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்பட்டார்கள். சரியான நேரத்தில் விக்கெட்டுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

Kohli-3

கோலி அவரது அணியை சிறப்பாக வழி நடத்தினார். அவர் இப்படி விளையாடும்போது எதிரணியில் நாங்கள் செயல்பட சற்று சிரமமாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை இதுவே எங்களது தோல்விக்கு காரணம். இருப்பினும் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று டூபிளிஸ்சிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement