England : 312 ரன்கள் எடுக்கக்கூடிய இலக்குதான் என்றாலும் எங்களது தோல்விக்கு இதுவே காரணம் – டூபிளிஸ்சிஸ்

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமை

Duplissis
- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

Eng

நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனபடி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

- Advertisement -

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய டூபிளிஸ்சிஸ் கூறியதாவது : இந்த மைதானத்தில் 312 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். இங்கிலாந்து வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார்கள். அந்த அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். முதல் ஓவரில் விக்கெட்டை இழந்தும் இங்கிலாந்து அணி மீண்டு சிறப்பாக ரன்களை குவித்தது.

எங்களது இந்த தோல்விக்கு காரணம் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்ததுதான். துவக்கம் சரியாக அமையாததால் போட்டியின் முடிவு மாறியது, துவக்கம் சரியாக இருந்தால் இந்த போட்டியில் எங்கள் அணி வெற்றி பெற்றிருக்கும் என்று டூபிளிஸ்சிஸ் கூறினார்.

Advertisement