CSK vs DC : போட்டி முடிந்ததும் வாட்சன் என்னிடம் நன்றி கூறினார். அதன் காரணம் இதுதான் – டுபிளிஸ்சிஸ்

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Watson-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Bravo

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் டுபிளிஸ்சிஸ் கூறியதாவது : இந்த போட்டிக்கு முன்னர் 5-6 ஆட்டங்களாக நாங்கள் ரன்களை குவிக்க வில்லை. ஆனால், எங்களிடம் பெரிய அளவு நம்பிக்கை இருந்தது அந்த நம்பிக்கை என்னவெனில் அது எங்களுடைய பார்ட்னர்ஷிப் மட்டுமே. மூன்று முதல் நான்கு ஓவர் வரை ரன்கள் அடிக்காமல் நாங்கள் இருந்தாலும் பின்வரும் ஆட்டக்காரர்களும் நடுவரிசை ஆட்டக்காரர்களும் அணியை சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்வார்கள்.

Watson-2

மேலும் வாட்சன் என்னிடம் ஏற்கனவே நன்றி கூறி இருக்கிறார். அதன் காரணம் யாதெனில் நான் ஆட்டத்தின் தூக்கத்திலேயே அதிரடியாக ஆடி விடுவேன். அதனால் வாட்சன் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தனது அதிரடி காட்டினார். எனவே அதற்காக அவர் என்னிடம் நன்றியை கூறினார். இந்த பார்ட்னர்ஷிப் இறுதிப் போட்டியிலும் இருக்கும் என்று டுப்ளிஸிஸ் கூறினார்.

Advertisement