CSK vs DC : அசாத்தியமாக கேட்ச் பிடித்து சிக்ஸரை தடுத்த டூப்ளிஸிஸ் – வீடியோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Duplissis
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரரான டுபிளிசிஸ் செய்த பில்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. பத்தொன்பதாவது ஓவரில் அமித் மிஸ்ரா தூக்கி அடிக்க அந்த பந்தை சிக்ஸ் லைனில் நின்றுகொண்டிருந்த டுபிளிசிஸ் அபாரமாக காற்றில் பறந்து பிடித்து பந்தை சிக்சருக்கு செல்லாமல் பிடித்தபடியே தூக்கி உள்ளே இருந்தார் இதோ அந்த வீடியோ

- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement