CSK vs SRH : ஏமாற்றத்துடன் ரன் அவுட் ஆகி வெளியேறிய சி.எஸ்.கே வீரர்- வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Faf
- Advertisement -

நேற்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்களை எதிர்த்து ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி துவக்க ஆட்டக்காரராக டுபிளிஸ்சிஸ் 7 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்திருந்தபோது அதிர்ச்சிகரமான ரன் அவுட் ஆனார். சன் ரைசர்ஸ் அணி வீரரான ஹூடா அபாரமாக த்ரோ செய்து டுபிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement