MS Dhoni : தோனியின் திட்டத்தை அப்படியே காப்பி அடித்த டூபிளிஸ்சிஸ் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Duplissis
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Eng

- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனபடி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

Tahir

தோனி ஐ.பி.எல் பவர்பிளே ஓவர்களில் இம்ரான் தாஹீரை பந்துவீச அழைப்பார். அதனை போன்று நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியின் கேப்டனான டூபிளிஸ்சிஸ் முதல் ஓவரை வீச தாஹிரை அழைத்தார். அதன்படி முதல் ஓவர் வீசிய தாஹிர் இரண்டாவது பந்தில் பேர்ஸ்டோவை அவுட் ஆக்கி அசத்தினார்.

Advertisement