கொரோனா முடிஞ்சி 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாட ஆசைப்படுகிறேன் – முன்னாள் தெ.ஆ கேப்டன் விருப்பம்

faf 2
- Advertisement -

தென்னாபிரிக்க அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணிக்கு பாப் டு ப்லெசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ஏபி டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றார். இதனால் பாப் டு ப்லெசிஸ் தலைமையிலும் தென் ஆப்பிரிக்க அணி சரிவைக் காணத் தொடங்கியது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரிலும் தென்னாபிரிக்க அணி தோல்வி அடைந்து வெளியேற மீண்டும் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு எழத்தொடங்கியது.

rsa

இதனால் மூன்று விதமான போட்டிகளிலும் அனைத்து அணிகளிடமும் அடிவாங்கியது. இதனால் தோனி போன்று பாப் டு ப்லெசிஸ் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் நியமிக்கப்பட்டார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இன்னும் கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தான் மீண்டும் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் பாப் டு ப்லெஸிஸ். இதுகுறித்து அவர் கூறுகையில் : தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட நான் எப்போதும் விரும்புகிறேன். அந்த அணிக்கு நான் பெருமை சேர்க்க முயற்சி செய்து வருகிறேன். கிரிக்கெட் இல்லாமல் தற்போது வீட்டில் இருக்கிறோம் இந்த தனிமை மீண்டும் கிரிக்கெட் விளையாடும் நோக்கத்தை எனக்குள் கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Faf

பாப் டு ப்லெசிஸ் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டதால் அவரை அணி நிர்வாகம் ஒதுக்கி வருகிறது. அதுமட்டுமின்றி 35 வயதான அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மாற்று வீரரை தென்னாபிரிக்க அணி தேர்வு செய்துவிட்டது என்றே கூறலாம். மேலும் இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை விளையாட வைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க திட்டம் வைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் தற்போது மீண்டும் தன்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்றும் அதற்காக ஆர்வமாக காத்திருப்பதாகவும் பாப் டு ப்லெசிஸ் கூறியுள்ளதால் அவரை மீண்டும் அணியில் நிர்வாகம் இணைக்குமா ? என்பதனை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். மேலும் ஏற்கனவே அனுபவீரர்கள் இன்றி தவிக்கும் தென்னாபிரிக்க அணிக்கு இவரும் இல்லை என்றால் பெரிய ஆதி விழும் என்பது குறிப்பிடத்தக்கது.

faf 1

35 வயது ஆகும் பாப் டு பிளேஸிஸ் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து தென்னாய்ப்பிரிக்க அணிக்கு ஆடி வருகிறார். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 3901 ரன்கள் அடித்துள்ளார். 9 சதங்கள் 21 அரை சதங்கள் அடித்துள்ளார். 143 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5507 ரன்கள் குவித்துள்ளார்.

Advertisement