Worldcup : இந்தியாவை நாங்கள் வீழ்த்தியே தீருவோம். இதுவே எங்கள் திட்டம் – டூபிளிஸ்சிஸ்

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

Faf
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

india

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான டுபிளிசிஸ் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் எங்களது பிளான் ஏ திட்டம் செயல்பட வில்லை. அதனால் இந்திய அணிக்கு எதிராக பிளான் பி திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம். பிளான் ஏ திட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை ஒட்டுமொத்தமாக வைத்து எதிரணியை கட்டுப்படுத்துவதே முக்கிய வேலையாக செய்தோம்.

Tahir

ஆனால் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதாலும் முக்கிய வீரர்கள் இடம் பெறாமல் போனதாலும் முதல் இரண்டு போட்டிகளில் எங்களால் அந்த பிளானை வெற்றிகரமாக முடிக்க வில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிராக பிளான் பி திட்டத்தினை வைத்து இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி சரியான கலவையில் பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களையும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தி இந்திய அணியை வென்று வெற்றியுடன் மீண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று டுபிளிசிஸ் கூறினார்.

Advertisement