RCB vs MI : அவரு அடிக்க ஆரம்பிச்சா தடுக்குறது ரொம்ப கஷ்டங்க. தோல்வி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

Nehal

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இருந்தாலும் டூப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக அதிரடியாக ரன்களை சேர்த்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பிறகு பெங்களூரு அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

பின்னர் டூபிளெஸ்ஸிஸ்-சும் ஆட்டமிழக்க 210 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக மெக்ஸ்வெல் 68 ரன்களையும், டூப்ளிசிஸ் 65 ரன்களையும் குவித்தனர். பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்ட 16.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

SKY

இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும், நேஹல் வதேரா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மும்பை போன்ற பலமான சேசிங் பவர் கொண்ட அணிக்கு எதிராக நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்களை குவித்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் எங்களால் குறிப்பிட்ட அளவு ரன்களை சேர்க்க முடியவில்லை. அதோடு இந்த போட்டியில் 200 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான் என்றாலும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலும் மும்பை அணியின் பேட்டிங் பலத்தினாலும் அவர்கள் மிகச் சிறப்பாக போட்டியை கொண்டு சென்று விட்டனர்.

இதையும் படிங்க : MI vs RCB : பெங்களூரு அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இதுதான் – ரோஹித் சர்மா பேட்டி

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்ய ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்துவது கடினம். இந்த சீசனில் முகமது சிராஜ் முதல் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் தற்போது கொஞ்சம் வெளியே சென்றுள்ளார். ஆனால் நிச்சயம் எங்கள் அணியின் வீரர்கள் பாசிட்டிவாக வந்து எஞ்சியிருக்கும் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement