இருட்டில் பேட்டிங் செய்தால் என்ன பண்ண முடியும். இந்திய அணியுடனான தோல்வி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் புலம்பல்

Faf
- Advertisement -

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை சமன் செய்த தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி தொடரை இழந்து நாடு திரும்பியது.

IND

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியுடனான இந்த தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இரண்டு நாட்களில் 500 ரன்களை அடிக்கின்றனர்.

அதன்பிறகு இருட்டில் நாங்கள் எங்களது 3 விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம் மீண்டும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கும்போது கடினமான அழுத்தத்தில் நாங்கள் விளையாட வேண்டி உள்ளது. அதனால் மேலும் விக்கெட்டுகளை இழந்து ஒரே நாளில் இன்னிங்சை எழுந்து விடுகிறோம். இதனால் தோல்வி ஏற்பட்டது இதேபோன்றுதான் 3 டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டோம்.

Umesh 3

ஒரு வேளை நாங்கள் டாசில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் முதலில் எங்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். அப்படி நடந்திருந்தால் நாங்கள் கண்டிப்பாக ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றிருப்போம். ஆனால் தொடர் முழுவதும் இந்திய அணியை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் டாசை ஒழித்து விட்டால் வருகை தரும் அணிகளுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். தென்னாப்பிரிக்காவில் நான் டாசை பொருட்படுத்த மாட்டேன் இதுவே எங்களது இந்த தொடர் தோல்விக்கு காரணம் என்று டூபிளெஸ்ஸிஸ் புலம்பியுள்ளார்.

Advertisement