2011 ஆம் உலககோப்பையில் நாங்க தோல்வி அடைந்த போது எனக்கு கொலை மிரட்டல் வந்தது – தெ.ஆ வீரர் பகீர் தகவல்

faf 2
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளதால் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டூபிளெஸ்ஸிஸ் தான் விளையாடிய காலத்தில் தனக்கு வந்த ஒரு கொலை மிரட்டல் குறித்து விவரித்துள்ளார்.

Faf-2

- Advertisement -

அதன்படி இந்தியாவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நாடு திரும்பிய தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும் எனக்கு மட்டுமின்றி என் மனைவிக்கும் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணி அணிக்கு எதிரான காலிறுதி போட்டிக்குப் பிறகு எங்களுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை வீட்டில் எங்களை நாங்களே தனிமைப் படுத்திக் கொண்டோம். சில நாட்களுக்கு வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்துதோம் அதன் பிறகுதான் நிலைமை சீரானது என்று கூறினார்.

Faf 1

மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது போல் மற்ற வீரர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது. அந்த சமயத்தில் மிகவும் பயந்த நானும் என் மனைவியும் வெளியுலக தொடர்பு இல்லாமல் தனியாக இருந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

faf

முக்கியமான அந்த காலிறுதிப் போட்டியில் டிவில்லியர்ஸ் ரன் அவுட்டாக டூபிளெஸ்ஸிஸ் காரணமாக இருந்தார். இதனாலே அவருக்கு கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement