சி.எஸ்.கே அணி இவங்க 2 பேர் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுது – தொடர்தோல்வி குறித்து டூப்ளெஸ்ஸிஸ்

faf
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தியது. ஆனால் அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் என அடுத்தடுத்த தோல்விகளால் இப்போது சிஎஸ்கே அணி கலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார் டூப்ளெஸ்ஸிஸ். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இப்போதைக்கு ஒரு அணியாக நாங்கள் குழம்பிய நிலையில் இருக்கிறோம். முக்கிய வீரர்கள் இல்லாமல் இத்தொடரில் விளையாடுவது சற்று சவாலானது. மேலும் அணியில் தற்போது சமச்சீர் தன்மையை கண்டறிவது அவசியம். என்ன மாதிரியான பிட்ச் என்பதைப் பொறுத்து அந்த அணியை தேர்வு செய்து விளையாட வேண்டும். ஒவ்வொரு பிட்ச்சும் இங்கு வித்தியாசமாக உள்ளது.

- Advertisement -

எங்களது பேட்டிங் ஆர்டரில் தற்போது ரெய்னா, ராயுடு ஆகியோர் இல்லை. எனவே வெற்றிக்கான கூட்டணியை தற்போது கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். மூன்று நாட்களில் அடைந்த தோல்விகளில் நிறைய கற்றுக் கொண்டோம். டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் எங்களிடம் சரியான பேட்டிங் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Rayudu

கடந்த பல ஆண்டுகளாக ஸ்பின்னர்களை வைத்து போட்டிகளை தீர்மானித்தோம். ஆனால் இங்கு ஸ்பின்னர்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்கின்றனர். அதனால் சரியான வீரர்கள் இன்றி தற்போது பிரச்சனையில் உள்ளது. சி.எஸ்.கே ஒரு வலுவான அணியாக இருந்து கவலை தரும் அணியாக நகர்ந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும் இப்போதைக்கு அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வதற்கான விடையைக் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்.

Rayudu

ஒரு பவுலர் சேர்த்தால் பேட்டிங் பிரச்சினையாகும். ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாகச் சேர்த்தால் பந்துவீச்சு பலமிழக்கும். டாப் ஆர்டரில் பிரமாதமாக ஆடும் வீரர் இல்லை. என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப போல் சிஎஸ்கே அணி வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று டு பிளிசிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement