ஓய்வில் இருந்து சர்வதேச டி20 தெ.ஆ அணிக்கு திரும்பும் மிஸ்டர் 360 – ரகசியத்தை வெளியிட்ட தெ.ஆ. கேப்டன்

Duplissis
- Advertisement -

அடுத்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பல்வேறு அணிகளும் தங்களது அணி வீரர்களை தயார் செய்து வரும் நிலையில் தற்போது தென்னாபிரிக்க அணி தங்கள் அணியில் ஓய்வுபெற்ற வீரரான ஏபி டிவில்லியர்ஸ் திரும்ப திட்டத்தில் உள்ளது.

abd1

டிவில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணியில் இருந்தால் மேலும் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் அவரை மீண்டும் அணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றபின் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் ஓய்வு பெற்று சில மாதங்கள் கடந்து விட்டதால் அவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அவரை தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

இருப்பினும் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பவுச்சர் பயிற்சியாளராகவும், க்ரீம் ஸ்மித் இயக்குனராகவும் இருப்பதால் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவதாற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகின்றன. மேலும் இது குறித்து பேசிய தென்ஆப்பிரிக்க அணியின் தற்போதைய கேப்டன் கூறியதாவது : மக்கள் டிவிலியர்ஸ் ஆடுவதை விரும்புகிறார்கள்.

ABD

நானும் அதையே தான் நினைக்கிறேன். இது குறித்த பேச்சுவார்த்தைகள் 2-3 மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன. இது எந்த விதத்தில் சாத்தியம் எப்படி முடியும் என்பதை பொறுத்து விரைவில் அறிவிப்பு வெளிவரும். அடுத்த டி20 தொடருக்கு முன்னர் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் அணிக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் டூபிளெஸ்ஸிஸ் கூறினார்.

Advertisement