தொடர் தோல்வியால் நாளை விசித்திரமான முடிவை எடுக்கவுள்ள டூபிளிஸ்சிஸ் – விவரம் இதோ

Faf
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்தியனை இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியின் முடிவு இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Umesh

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி மோசமான தோல்வியை பெற்றது. இந்தத் தோல்வியிலிருந்து தென்னாப்பிரிக்க அணியை மீண்டுவர தற்போது ஒரு புதிய யுக்தியை கையாள இருப்பதாக டூபிளிஸ்சிஸ் முடிவெடுத்துள்ளார். அதன்படி தற்போது நடைபெற்றுவரும் தொடரோடு சேர்த்து மொத்தம் 7 போட்டிகளில் தொடர்ந்து 7 டாஸை இழந்துள்ளார்.

டாஸ் தோற்பதும் ஒருவகையில் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே நாளைய போட்டியில் கேப்டனாக அவர் செயல்பட்டாலும் டாஸ் போடுவதற்கு புதிதாக அணியிலிருந்து ஒருவரை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் நிச்சயம் போட்டி முடிவில் மாற்றம் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Maharaj-1

ஏனெனில் இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு ஒருமுறை இதே போன்று தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக தோற்கும் போது டுமினியை டாஸ் போட அனுப்பினார். அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸையும் ஜெயித்து போட்டியையும் ஜெயித்தது. அதுபோல நாளைய போட்டியில் அந்த யுக்தியை டூபிளெஸ்ஸிஸ் கையாள உள்ளதாக தெரிகிறது. இதையெல்லாம் செய்தால் கூட வெற்றி கிடைக்குமா ? என்று இந்திய ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement