பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்த டூபிளெஸ்ஸிஸ்சால் தோல்வியை சந்தித்ததா சி.எஸ்.கே? – ரசிகர்கள் வேதனை

faf
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 27 ஆவது லீக் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி டூபிளெஸ்ஸிஸ், மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதன்பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டதால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர்.

rayudu 2

- Advertisement -

ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் டிகாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து அசத்தினர். முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் டிகாக்கும் 38 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற மும்பை அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த க்ருனால் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தனர். க்ருனால் பாண்டியா 23 பந்துகளில் 32 ரன்கள் அடித்து வெளியேற அடுத்ததாக ஹார்டிக் பாண்டியா 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து தனது பங்கிற்கு ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் வெற்றிக்கு தேவைப்படும் ரன்களை அடிக்கும் ஒரே ஆளாக நம்பப்பட்ட பொல்லார்ட் மும்பை அணிக்காக இறுதிவரை நின்று 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

pollard

அதிலும் குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் பொல்லார்ட் இருந்தால் மட்டுமே இந்த சேஸிங் சாத்தியம் என்று எதிர்பார்க்கப்பட்ட வகையில் களத்திலிருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து மீதமுள்ள ஐந்து ஓவர்களுக்கு 66 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குஇருந்ததால் நிச்சயம் பொல்லார்ட் இறுதிவரை களத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று ஆனது.

- Advertisement -

அதன்படி பொல்லார்டும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்தாலும் இந்த போட்டியில் 18-வது ஓவரில் போது டுப்லஸ்ஸிஸ் பொல்லார்டின் எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். அவரின் இந்த தவறு போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. தாகூர் வீசிய அந்த 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது அந்த பந்து டாப் எட்ஜ் ஆகி லாங் ஆன் திசையில் இருந்த டூபிளெஸ்ஸிஸ் கைகளுக்கு சென்றது.

faf 1

எப்போதுமே கடினமான பந்துகளை கூட எளிதாக பிடிக்கும் டூபிளெஸ்ஸிஸ் இந்த கேட்ச்சை பிடிக்க கோட்டை விட்டார். அவர் கேட்ச் விட்டதன் விளைவாக அடுத்து இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த போட்டியை மும்பை அணிக்காக பொல்லார்ட் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இந்த போட்டியில் டுப்லஸ்ஸிஸ் விட்ட இந்த கேட்ச் இறுதிநேரத்தில் ஆட்டத்தை மாற்றியதால் ரசிகர்கள் சற்று வேதனை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement