அப்பாடா என்னா கேட்ச். பவுண்டரி லைனில் அசத்திய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் மில்லர் – வைரலாகும் வீடியோ

Miller
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது டி20 போட்டி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன்படுத்தி உள்ளது.

- Advertisement -

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 158 ரன்களை குவிக்க அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்படும்போது 19-வது ஓவரை வீசிய ரபாடா மூன்று ரன்களை மட்டுமே வழங்கினார். அடுத்து இருபதாவது ஓவரை வீசிய வீரர் 4 ரன்களை விட்டுக் கொடுக்க இறுதியில் தென்னாபிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மிச்செல் மார்ஷ் தூக்கி அடித்த ஒரு பந்தினை பவுண்டரி லைனில் டூப்லெஸிஸ் மற்றும் மில்லர் ஆகியோர் சிறப்பாக டைவ் அடித்து பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.அவர்கள் இருவரது இந்த முயற்சி சிறப்பாக அமைந்தது.

Advertisement