ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த 2 வீரர்கள் – யார் தெரியுமா?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் விலகி உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இந்திய அணியில் இணைந்த 2 வீரர்கள் :

மேலும் அவர்கள் இருவரும் காயத்தை சந்தித்ததால் தான் இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்கள் என்றும் அதை தொடர்ந்து அவர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த சிகிச்சை முடிந்து அங்கேயே பயிற்சிபெற இருக்கும் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து வரும் டி20 தொடர்களில் உடற்தகுதியின் அடிப்படையில் மீண்டும் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படி ரிங்கு சிங் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் வெளியேறி உள்ளதால் அவர்கள் பதிலாக இரண்டு மாற்று வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

அந்த வகையில் சமீப காலமாகவே இந்திய அணிக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் துபே மீண்டும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் தற்போது துபே தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் ஏற்கனவே இந்திய டி20 அணியில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் அவருக்கு இந்த அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு வீரராக கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரமன்தீப் சிங் மீண்டும் இறுதி அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து விலகிய ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் ரெட்டி – காரணம் இதுதான்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மிதவேகப்பந்து வீச்சாளரான அவரால் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாட முடியும் என்பதனாலே இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement