அங்க சுத்தி. இங்க சுத்தி கடைசில ஐ.பி.எல் ஸ்பான்சர் யாருக்கு கொடுத்திருக்காங்க பாருங்க – விவரம் இதோ

ipl
- Advertisement -

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது .அதற்காக பெரும் பொருட் செலவில் துபாய், அபுதாபி ஆகிய நகரங்களில் மைதானங்கள் ஒதுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது . மேலும் வீரர்கள் ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒன்றாக பாதுகாப்பு வளையத்திற்குள் தங்குவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

Ipl cup

- Advertisement -

இப்படி செலவு செய்யப் படுவதால் வழக்கத்தைவிட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக செலவாகும். இதன் காரணமாக பிசிசிஐ தனது ஸ்பான்சர்களிடம் தற்போது கறார் காட்டத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சீன நிறுவனமான விவோ மொபைல் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் என்னும் தகுதியில் இருந்து தானே நீக்கிக் கொண்டது.
.
இதன் காரணமாக புதிய டைட்டில் ஸ்பான்சர் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அமேசான் நிறுவனம் 400 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக குறைந்தது இந்த வருடம் எந்த நிறுவனம் 300 கோடி கொடுக்கிறதோ. அந்த நிறுவனத்திற்கு தான் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் என்று அறிவித்திருந்தது பிசிசிஐ.

IPL-1

தற்போது காலியாக உள்ள இந்த இடத்தை பிடிப்பதற்காக அமேசான், பைஜூஸ், ட்ரீம் லெவன், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஐ.பி.எல் நிர்வாகம் முறையான அதிகாரபூர்வமான ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனத்தை அறிவித்துள்ளது.

Dream 11

அதன்படி இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐ.பி.எல் தொடருக்கு ட்ரீம் 11 ஸ்பான்சர் செய்யப்போவதாகவும், அதற்காக ட்ரீம் லெவன் நிறுவனத்திடம் இருந்து 222 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பெட்டிங் ஆப்புகளை தடை செய்ய கோரி பல சமூக ஆர்வலர்கள் வழக்குகளைத் தொடுத்து வரும் இவ்வேளையில் ஆன்லைன் பெட்டிங் ஆப்பிற்க்கு ஸ்பான்சர் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement