ஸ்டெயின் வீசும் பவுன்சர் பந்தை நான் தொடக்கூட மாட்டேன் அதன் காரணம் இதுதான் – ரகசியத்தை உடைத்த டிராவிட்

Dravid
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

steyn 1

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டெயினுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஸ்டெயின் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஸ்டெயின் உலகஅளவில் ஒரு மிகச் சிறந்த ஒரு பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டிகளின் போது அவர் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை மற்றும் பவுன்சர் பந்துகளை நான் அடிக்க முயல மாட்டேன். பந்தினை தொடாமல் அப்படியே விட்டுவிடுவேன். ஏனெனில் அவர் வீசும் வேகத்தில் அந்த பந்தினை என்னால் புல்ஷாட் அடிக்க முடியாது.

Steyn

மேலும் அவ்வாறு அந்த ஷாட்டை நான் அடிக்க முயன்றாலும் எனது கண்ட்ரோலில் அந்த ஷாட் இருக்காது என்பதை உணர்ந்து நான் அவரது பந்து வீச்சின் போது நிதானத்துடன் ஆடுவேன் என்று ஸ்டெயினின் பந்துவீச்சு குறித்து பாராட்டி இந்திய அணியின் தடுப்பு சுவர் ராகுல் டிராவிட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement