இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? – நச்சுனு பதில் சொன்ன கோச் டிராவிட்

Dravid
Advertisement

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகுப்பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக பந்து வீசாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக பங்கேற்ற பாண்டியா அந்த தொடரில் பந்து வீசாதது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதோடு பாண்டியா ஒரு ஆல்-ரவுண்டராக இருந்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்றும் இல்லையென்றால் அணியை விட்டு நீக்கப்படுவார் என்ற பேச்சுகளும் எழுந்தது.

pandya

அதனை தொடர்ந்து பாண்டியா தான் பந்துவீசும் அளவிற்கு தயாராகும் வரை தன்னை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என தேர்வுக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல தொடர்களை அவர் தவறவிட்டார். அதன்பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக கம்பேக் கொடுத்து விளையாடிய பாண்டியா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்திலும் அசத்த முதல் முறையாக அறிமுகம் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் பந்துவீச துவங்கியுள்ள பாண்டியா சிறப்பான பார்மில் இருப்பதனால் தென்னாபிரிக்க தொடருக்கான இந்த டி20 தொடரிலும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டிராவிட் ஹர்திக் பாண்டியா குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

Pandya

மேலும் இந்திய இந்திய அணியிலும் பாண்டியாவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் டிராவிட் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே குஜராத் அணியை சிறப்பாக தலைமைதாங்கி வழிநடத்தினார். அவரது கேப்டன்சி அந்த தொடர் முழுவதுமே அற்புதமாக இருந்தது.

- Advertisement -

ஆனாலும் எங்களின் பார்வை பார்வையில் பாண்டியாவிடம் இருந்து நாங்கள் பெற விரும்பும் போது அவருடைய திறன்களை மட்டும்தான். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அவர் அணிக்காக அவரது திறன்களை வெளிப்படுத்தினால் போதும் என்று டிராவிட் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கேப்டன் பதவி தற்போது வழங்கப்படாது என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இந்திய அணி ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமே அவரை பார்ப்பதும் டிராவிடின் இந்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : என்னங்க பெரிய ரிஷப் பண்ட் ! உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எங்களிடம் உள்ளார் – பென் ஸ்டோக்ஸ் பெருமிதம்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் கேப்டன்சி என அசத்தலாக செயல்பட்டுள்ளதால் அவரை இந்திய அணிக்கு கேப்டனாக மாற்ற வேண்டும் என்று ஒரு விவாதம் நடந்து வந்த வேளையில் இவை அனைத்திற்கும் டிராவிட் தற்போது அவரை ஆல்ரவுண்டராகத்தான் பார்க்க விரும்புகிறோம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement