என்னங்க பெரிய ரிஷப் பண்ட் ! உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எங்களிடம் உள்ளார் – பென் ஸ்டோக்ஸ் பெருமிதம்

Stokes
Advertisement

வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்துள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து எதிர்கொண்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் 2-வது இன்னிங்சில் சதமடித்து 115* ரன்கள் குவித்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Joe Root

அதைவிட இந்த தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தனது புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. மேலும் இப்போட்டியில் ஜோ ரூட் 10000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்தது, நட்சத்திர அனுபவ சீனியர் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியது என சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்திற்கு இந்த முதல் போட்டியிலேயே ஏராளமான ஆறுதல்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

பென் போக்ஸ்:
அதேபோல் புதிய பயணத்தை துவங்கியுள்ள அந்த அணிக்கு புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்த துவங்கியுள்ள பென் போக்ஸ் இப்போட்டியில் மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததுடன் கடைசி நேரத்தில் ஜோ ரூட் உடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் 32* ரன்கள் குவித்து வெற்றி பங்காற்றினார். கடந்த 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சுமாராக செயல்பட்டதால் நிலையான இடத்தை பிடிக்க தவறினார். இருப்பினும் கடந்த 2021இல் இந்திய மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் தனக்கான இடத்தை நிலையாக பிடித்துள்ளார்.

குறிப்பாக சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய மைதானங்களில் பந்து தாறுமாறாக சுழன்ற போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த இவரை பல முன்னாள் இந்திய வீரர்களே மனதாரப் பாராட்டினார்கள். ஏனெனில் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் இந்தியா போன்ற ஆசிய கண்டத்தில் சுழலும் பிட்ச்களுக்கு ஏற்றவாறு விக்கெட் கீப்பிங் செய்ய தடுமாறுவார்கள். அதேபோல் பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வரும் அவர் தற்சமயத்தில் உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சிறந்த கீப்பர்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யும் தருணத்தில் நாங்கள் இல்லை. பென் போக்ஸ் உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல நிறைய பேரின் கருத்தாகவும் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் இடத்தைவிட இங்கிலாந்துக்காக 7-வது பேட்டிங் இடத்தில் அவர் விளையாடுவது வித்தியாசமானது. இந்த போட்டியில் முக்கியமான கடைசி 45 நிமிடங்களில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் அவர் பிடிக்கும் கேட்ச்கள் பார்ப்பதற்க்கு எளிதாக தோன்றினாலும் அது கடினமானதாகும். அவரைப்போன்ற விக்கெட் கீப்பர் எங்களது அணியில் இருப்பதால் 10இல் 9 கேட்ச்களை சரியாக பிடித்து விடுவார் என்பதால் எனக்கும் பவுலர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கிறது” என்று கூறினார்.

தனது அணி இளம் விக்கெட் கீப்பருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இப்படி பாராட்டி பேசினாலும் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று அவர் கூறியுள்ளது சற்று அதிகமானதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இதுவரை வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம் 1 அரைச்சதம் மட்டுமே அடித்துள்ள அவர் ஒரு வளர்ந்துவரும் விக்கெட் கீப்பராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

என்னங்க பெரிய பண்ட்:
ஆனால் தற்போதைய தேதியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அழுத்தம் வாய்ந்த சூழ்நிலைகளிலும் அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக தன்னை நிரூபித்துள்ளார். அதிலும் சவால் மிகுந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ள அவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார்.

Rishabh Pant Adam Gilchrist

அதனால் ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் அவரை நம்பர் 1 விக்கெட் கீப்பர் என்று பாராட்டிய நிலையில் அவரைப் பற்றி நினைவில்லாமல் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளதாக இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement