சி.எஸ்.கே தொடர்ந்து ஜெயிக்கவும், பெங்களூரு தோற்கவும் இதுமட்டும் தான் காரணம் – புட்டு புட்டு வைத்த டிராவிட்

Dravid
Dravid

ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை வெற்றிகளை அதிகம் குவிக்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திகழ்கிறது. அதேசமயம் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் தோல்வியின் முகமாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் பெரும்பாலான தொடர்களில் பெங்களூரு அணி மிகப் பலம் வாய்ந்த வீரர்களை கொண்டு இருந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

Rcb

மேலும் கடந்த ஆண்டு கூட பெரும்பாலான போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசிகட்ட நிலையை அடைந்து பரிதாபமாக பெங்களூர் அணி வெளியேறியது. அதேசமயம் டேடி அணி என்று அழைக்கப்பட்ட சென்னை அணி அதிக வெற்றிகளைப் பெற்று இறுதி வரை சென்று மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிக்கும் ஏன் இந்த வெற்றி தோல்வி பாகுபாடு உள்ளது என்று கேப்டன் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விளக்கியுள்ளார். அதில் சென்னை அணியை பொறுத்தவரை அதன் உரிமையாளர் கிரிக்கெட் அனுபவமுள்ள நபராக இருப்பதே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மற்ற அணிகளை விட சென்னை அணி வீரர்களும், அணித்தேர்வும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார். சென்னை அணியில் நான்கு பிரிவுகளிலும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாகவும், இந்திய அணி தரப்பில் குறைந்தளவு வீரர்கள் இருந்தாலும் அவர்கள் சிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள் இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு உதவியது என்று டிராவிட் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் சென்னை அணி பவுலிங்கில் தரமாக உள்ளதாகவும், எதிர் அணியை கணித்து ஆடுவதில் அவர்கள் சாமர்த்தியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவையே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாகும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பெங்களூர் அணியை பொறுத்தவரையில் அணி தேர்வு மற்றும் வீரர்களை ஏலத்தில் எடுத்தல் போன்றவை இரண்டிலும் பிழை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் போன்றவர்கள் பெங்களூர் அணியில் இருந்த போது அந்த அணி வெற்றி பெற்றதாகவும் அவர்களை அனுப்பிவிட்டு சில சமயங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்களை எடுத்தது தவறு என்றும் ராகுல் குறை கூறியுள்ளார். இதனால்தான் பெங்களூர் அணி தோல்விகளை சந்தித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பெங்களூரு அணியை பவுலிங்கில் பலப்படுத்தினால் அந்த அணி மேலும் வலுப்படும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.