- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் ஒரு கடமை பாக்கியிருக்கு.. வெளியேறும் முன் விராட் கோலிக்கு வேண்டுகோள் வைத்துச்சென்ற – ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்த முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியுடன் அந்தப் பதிவில் இருந்து வெளியேறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார்.

என்னதான் டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்து இருந்தாலும் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டும் தொடர்ந்து நீடித்து வந்தது.

- Advertisement -

அந்த குறையையும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றியதின் மூலம் தீர்த்து வைத்த டிராவிட் தற்போது வெற்றிகரமாக பயிற்சியாளராக இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேறும் முன்னதாக வீரர்களின் ஓய்வறையில் டிராவிட் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இன்னும் ஒரு வேலை மீதம் இருப்பதாக சுட்டிக்காட்டி அதனையும் சாதித்து விட வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறும் வகையில் டிராவிட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து டிராவிட் கூறுகையில் : மூன்று வெள்ளை பந்து கோப்பைகளையும் முடித்து விட்டீர்கள். இன்னும் ஒரு சிகப்பு மட்டுமே மீதம் உள்ளது அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்று டிராவிட் அவரிடம் கூறினாராம்.

- Advertisement -

அதாவது வெள்ளை பந்துகளில் ஆடப்படும் 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று வகையான உலககோப்பையை வென்ற அணியிலும் விராட் கோலி இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இன்னும் சிகப்பு பந்தில் விளையாடும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மற்றும் கைப்பற்ற வேண்டும் என அவருக்கு ஒரு அசைன்மெண்டை கொடுத்துவிட்டு டிராவிட் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கை வெளியே விடாத ஆர்சிபி.. 2 பதவியை கொடுத்து வெளியிட்ட அறிவிப்பு

அவர் கூறியபடியே இந்திய அணியின் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகள் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த கோலி இன்னும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மட்டும் கைப்பற்றினால் அவரது கிரிக்கெட் கரியர் முழுமை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -