- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டி20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார்? ரோஹித்தா? கோலியா? தோனியா? – தினேஷ் கார்த்திக் பதில்

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2007-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் முதல் டி20 உலக கோப்பை வென்ற பிறகு தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இப்படி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணி குறித்து பல்வேறு விடயங்கள் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த கேள்விக்கு தினேஷ் கார்த்திக் தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகவும் வித்தியாசமானது. அவர் எந்த ஒரு விடயத்திலும் ஆழ்ந்த கவனத்தை செலுத்துகின்ற கேப்டன். ஆனால் தோனி உள்ளுணர்வை மட்டுமே நம்புவார் தனக்குள் என்ன தோன்றுகிறதோ அதனை திட்டமிட்டு அதனை அப்படியே செயல்படுத்துவார். அவரது கேப்டன்சி மிகவும் நேர்த்தியான அமைதியான ஒன்று.

மற்றபடி பெரிய அளவில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்ட மாட்டார். ஆனால் விராட் கோலியின் கேப்டன்சி பட்டாசு போல் இருக்கும். எப்போதுமே எதிரணியின் முகத்திற்கு நேராக சென்று சவால் கொடுக்கும் கேப்டனாக அவர் இருந்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா களத்தில் என்ன நடக்குது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவார்.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு எந்த வீரர் மீது நம்பிக்கை இருக்கிறதோ அந்த வீரருக்கு முழு ஆதரவை வழங்குவார். அதோடு தொடர்ந்து பல போட்டிகளில் வாய்ப்பு வழங்குவார். இதனால் இந்திய அணியில் பலரும் ரோகித் சர்மாவுடன் விளையாடுவதை விரும்புவார்கள்.

இதையும் படிங்க : 8 மணிக்கு ஆடுனா இந்தியா ஜெயிச்சுடுமா? 80% ஷேர் வெச்சிருந்தா அப்படி தான்.. மைக்கேல் வாகனுக்கு கங்குலி பதிலடி

அதேபோன்று ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் டிராவிடின் பங்கு அதிகம். அவர் என்ன கூறுகிறாரோ அதையெல்லாம் ரோகித் சர்மா கேட்டுக்கொண்டு அவர் கட்டமைக்கும் அணியில் அதற்கு முக்கியத்துவம் வழங்குவார் என தனித்தனியே மூவரது கேப்டன்சியும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -