- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பிய பின்னர் நடக்கவுள்ள நிகழ்ச்சி – பிரதமர் செய்துள்ள ஏற்பாடு

கடந்த ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த 29-ஆம் தேதியே நிறைவடைந்தாலும் இந்திய வீரர்கள் இன்னும் நாடு திரும்பாமல் இருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவுகளில் “பெரல்” என்கிற புயல் எச்சரிக்கை காரணமாக ஜூலை 1-ஆம் தேதி வரை பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

- Advertisement -

அதன்காரணமாகவே இந்திய வீரராகள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் இன்று ஜூலை 3-ஆம் தேதி இந்திய வீரர்கள் தனி விமானம் மூலம் நியூயார்க் வந்தடைந்து அங்கிருந்து துபாய் வந்து துபாயில் இருந்து இந்தியாவிற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வீரர்களுக்காகவும், வீரர்களின் குடும்பத்தார் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்காகவும் தனியாக ஒரு விமானத்தை புக் செய்து அவர்களை அழைத்து வர உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் விரைவில் நாடு திரும்ப இருக்கும் இந்திய வீரர்களுக்காக ஒரு நிகழ்ச்சியினை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்ய இருக்கிறார் என்றும் ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற தங்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றுதால் அந்த அணியின் வீரர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க : இந்திய டி20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார்? ரோஹித்தா? கோலியா? தோனியா? – தினேஷ் கார்த்திக் பதில்

அதன்படி பிரதமர் மோடி அவரது தலைமையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி பின்னர் வீரர்களுக்கு உணவு விருந்து அளிக்க உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ சார்பாக 125 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார்.

- Advertisement -