அப்பாவை மிஞ்சும் மகன்..! உள்ளூர் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரரின் வாரிசு.! யார் தெரியமா..?

Samit-dravid

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவான்களான சச்சின் மற்றும் டிராவிட் இந்திய அணியின் தவிர்க்கமுடியாத நட்சத்திரங்களான இருந்து வந்தனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சினின் மகன் ஏற்கனவே யு19 அணியில் அசத்தி வரும் நிலையில் தற்போது டிராவிட் மகனும் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.

dravid

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று போற்றப்படும் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்து வந்தார். தற்போது இந்திய யு19 அணியின் பயிச்சியாளராக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார். டிராவிட் கடந்த 2003 ஆம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த விஜிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு சமித் மாற்றும் அன்வய் என்று இரு ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

தற்போது ராகுல் ட்ராவிடின் மூத்த மகனான சமித்திற்கு 12 வயதாகிறது. பெங்களூரில் உள்ள மல்லையா அதிதி சர்வேதேச பள்ளியில் படித்து வரும் சமித் சமீபத்தில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் மல்லையா அதிதி பள்ளி சார்பில் பங்குபெற்று விளையாடினார்.

samith

இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சமித் 51 ரன்கள் எடுத்து அசத்தியதோடு, பந்துவீச்சில் கலக்கிய சமித் வெறும் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டிராவிட் பேட்டிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்து வந்த நிலையில், தற்போது அவரது மகன் ஆள் ரௌண்டராக கலக்கி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.