நான் செய்த இந்த தவறுக்காக ராகுல் டிராவிட் சார் என்னை ரொம்பவே திட்டினார் – ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படை

Dravid
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஆறு மாதங்களை ஷ்ரேயாஸ் ஐயர் தவறிவிட்டார். இதன் காரணமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை முழுவதுமாக தவறவிட்ட ஷ்ரேயாஸ் அய்யர் இரண்டாவது பாதியில் மீண்டும் டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் தனது அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Iyer-5

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அடுத்த இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஒரே ஓய்வறையில் இருப்பது இதுவே முதல் முறை. ஆனால் இதற்கு முன்னரே ஷ்ரேயாஸ் ஐயர் டிராவிட் அவர்களின் பயிற்சியின் கீழ் இந்தியா ஏ அணியில் பல ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

அப்படி அவர் இந்திய ஏ அணிக்காக விளையாடும் போது ஒரு முறை டிராவிட் அவரை திட்டிய சம்பவம் குறித்து ஏற்கனவே அவர் நினைவு கூர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு முறை நான் இந்திய ஏ அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளின் முடிவில் கடைசி ஓவரில் சிக்சர் ஒன்றினைப் அடித்தேன். நான்காவது நாள் முடிவில் கடைசி ஓவரில் நான் சிக்சர் அடித்தால் டிராவிட் என்னை திட்டினார்.

Jadeja

அப்பொழுதுதான் அவர் என்னை முதல் முறையாக பார்க்கிறார். நான் அந்தக் கடைசி ஓவரின் போது 30 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அந்த கடைசி ஓவரில் ஒரு பந்து நன்றாக பேட்டுக்கு அழகாக தூக்கி வீசப்பட்டதால் அந்த பந்தினை நான் சிக்சர் விளாசினார். டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த அனைவருக்கும் அந்த சிக்ஸர் பிடித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ரஹானே இந்த தப்பை ஒன்னு ரெண்டு மேட்ச்ல செய்யல தொடர்ந்து பண்றாரு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

ஆனால் ராகுல் டிராவிட் சார் என்னிடம் வந்து “என்ன ஆட்டம் இது?” போட்டியின் கடைசி ஓவரில் இதுபோன்றுதான் விளையாடுவாயா ? முதலில் ஆட்டத்தை விளையாடக் கற்றுக்கொள். இதுபோன்ற தவறுகளை நாளின் முடிவில் செய்யக்கூடாது என்று திட்டி விட்டு சென்றார் என்று ஷ்ரேயாஸ் ஐயர் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement