ரஹானே இந்த தப்பை ஒன்னு ரெண்டு மேட்ச்ல செய்யல தொடர்ந்து பண்றாரு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே தொடர்ந்து தனது பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து இரண்டாவது போட்டியின்போது கழட்டிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆண்டில் மட்டும் அவர் தொடர்ச்சியாக சராசரியாக 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வருவதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Rahane

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக்கும் ரஹானே இரண்டாவது போட்டியின்போது அணியிலிருந்து நீக்கப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மேலும் அவரது நீக்கம் தவறு கிடையாது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக வந்து அசத்தலாக விளையாடியுள்ளார். தற்போது என்னை பொருத்தவரை ரஹானே தான் அழுத்தத்தில் இருக்கிறார்.

எனவே தென்னாபிரிக்கா தொடருக்கு முன்னர் ஒரு போட்டியில் அவரை விளையாட வைக்காமல் வெளியே அமர்த்திவிட்டு மீண்டும் கொண்டு வந்தால்தான் அவரது கம் பேக் சரியாக இருக்கும். அவரை ஒரு போட்டியில் விளையாட வைக்காமல் வெளியே அமர்த்தினால் அதில் எந்தவித குற்றமும் இல்லை. ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Rahane

அதுமட்டுமின்றி அவரது சொந்த மாநிலமான மும்பையில் போட்டி நடைபெறுவது கூடுதல் சாதகமாக அமையும். ரஹானே டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஒன்னு அல்லது ரெண்டு போட்டிகளாக அவர் அந்த தவறை செய்யவில்லை கடந்த சில ஆண்டுகளாக நீண்டகால தவறாக செய்துவருகிறார். எனவே அவரை இரண்டாவது போட்டியில் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக கோலியை அணியில் சேர்க்கலாம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே தான் என்னோட ஆட்டம் என்னன்னு பாக்க போறீங்க. வெகுண்டு எழுந்த – விராட் கோலி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னை பொருத்தவரை புஜாரா மீது எந்தவிதமான அழுத்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவர் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவர் சதமடித்து நீண்ட போட்டிகள் ஆகிவிட்டன. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சதம் அடித்த அவர் அதன் பிறகு இதுவரை சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார் என்பதையும் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement