நான் பாத்து பேட்டிங் பண்ண பயந்த பவுலர்னா அது இவர் ஒருவர் தான் – டிராவிட் ஓபன் டாக்

dravid
- Advertisement -

இந்திய அணிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என்ற பெயர் பெற்றவர். அணிக்காக கிரிக்கெட்டில் எந்தவிதமான வேலையும் செய்யக்கூடாது விக்கெட் கீப்பர் இல்லாத காலத்தில் திடீரென்று விக்கெட் கீப்பராக இறங்கி உலக கோப்பை தொடர் முழுவதும் ஆடியவர்.

Dravid 1

- Advertisement -

இவரது காலக்கட்டத்தில் சமிந்தா வாஸ், பிரெட்லி, க்ளென் மெக்ராத், டேல் ஸ்டைன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் அக்தர், லசித் மலிங்கா, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முத்தையா முரளிதரன் என பல ஜாம்பவான்களை வீச்சாளர்களை எதிர்த்து ஆயிரக்கணக்கில் ரன் குவித்தவர்.
சமீபத்தில் ராகுல் டிராவிட்டின் பேட்டை கடந்து என்னால் பந்து வீச முடியாது என்றெல்லாம சொல்லி சோயப் அக்தர் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

அந்த அளவிற்கு தடுப்பு சுவரை போன்று நின்று ஆடுபவர் இந்நிலையில் ராகுல் டிராவிட்டை கதிகலங்க வைத்து ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறார் ஒரு பந்து வீச்சாளர் . அந்த பந்து வீச்சாளர் பற்றி ராகுல் டிராவிட் ஒரு காலத்தில் கூறியதாவது..

Steyn

தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் பந்து வீசும்போது மிகவும் துல்லியமாக இருக்கும். பந்தில் வேகம் மட்டும் இருக்காது ஸ்விங், ஸ்கிட் என அனைத்தும் அவர் வீசும் பந்தில் இருக்கும் . மேலும், புதிய பந்தில் அவரை எதிர் கொள்வது மிகவும் கடினம் . அவர் பந்துவீசும் போது நாம் தடுப்பாட்டம் ஆட வேண்டும். அவர் பவுன்சர் வீசினால் கண்ணை மூடிவிட்டு, விட்டு விடுவேன் ஏனெனில் அவர் அந்த பந்து வீசும்போது எனது கட்டுப்பாட்டில் எதுவுமே இருக்காது.

Dravid

அந்த பந்தை ஆட முயற்சித்தோமானால் நாம் விக்கெட்டை தான் இழக்க வேண்டும். அவ்வளவு அருமையான பந்துவீச்சாளர் அவர் . என்று புகழாரம் சூட்டியுள்ளார் ராகுல் டிராவிட். இவ்வாறு கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டேல் ஸ்டைன் கடந்த ஆறு வருடங்களாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது 35 வயதான அவர் தென்ஆப்பிரிக்க அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். சீக்கிரம் ஓய்வை அறிவிப்பார் என்று தெரிகிறது.

Advertisement