பவுலர்களுக்காக விமானத்தில் தங்களுக்கு கிடைத்த சலுகையை விட்டுக்கொடுத்த டிராவிட், ரோஹித், கோலி – சுவாரசிய தகவல்

Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளை பெற்று குரூப் இரண்டில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 10-ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியின் போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி அடிலெயிடு மைதானத்தில் நடைபெற இருப்பதினால் வீரர்கள் அனைவரும் மெல்போர்னில் இருந்து அடிலெயிடுக்கு வந்தடைந்து தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மெல்போர்ன் நகரில் இருந்து அடிலெயிடு நகருக்கு இந்திய வீரர்கள் விமானத்தில் பயணம் செய்த வேளையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் மற்றும் சீனியர் வீரர் விராட் கோலி ஆகியோருக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்த வேளையில் அவர்கள் மூவரும் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கையை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.

Arshdeep Singh

ஐசிசி விதிகளின்படி ஒவ்வொரு அணிக்கும் நான்கு பிசினஸ் கிளாஸ் சீட்டுகள் மட்டுமே விமானத்தில் ஒதுக்கப்படும். இந்த சலுகையை பெரும்பாலும் அணியில் உள்ள பயிற்சியாளர், கேப்டன், சீனியர் கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் பயன்படுத்தி கொள்வார்கள்.

- Advertisement -

ஆனால் இம்முறை ரோகித், கோலி, டிராவிட் ஆகியோர் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கையை பவுலர்களுக்காக விட்டுக்கொடுத்தனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் கால் வலி மற்றும் முதுகு வலியை போட்டிகளின் போது எதிர் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஒன்றரை மணிநேர பயண நேரத்தில் அவர்கள் பிசினஸ் கிளாஸ் சீட்டில் அமரும்போது காலை நீட்டி ஓய்வு எடுக்க அது ஏதுவாக இருக்கும் என்பதனால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : நேரலையில் போக்கஸ் பண்ணும் போது சிக்கிய அஷ்வினின் விசித்திரமான செயல் – கலாய்க்கும் ரசிகர்கள்

அதன்படி இந்த பிசினஸ் கிளாஸ் இருக்கையை முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement