கொல்கத்தா அணியை சேர்ந்த 20 வயது வீரரின் வாழ்க்கையை காப்பாற்றிய டிராவிட் – விவரம் இதோ

Nagarkoti-3
- Advertisement -

2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஆடிய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி  மிகச் சிறந்த அணி என்று கூறலாம். அந்த அணியில் இருந்து தற்போது பல சிறந்த சர்வதேச தரத்திலான வீரர்கள் உருவாகி விட்டனர். பிரித்வி ஷா, சுப்மன் கில், அபிஷேக் சர்மா போன்ற பல மிகச் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். இந்த அணியில் குறிப்பாக சிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோடி என்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் இவர்கள்தான் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கூறும் அளவிற்கு அவர்களிடம் திறமை இருக்கிறது. இந்த இருவரும் கொல்கத்தா அணிக்காக 2018 ஆம் ஆண்டு ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டனர். குறிப்பாக தற்போது 20 வயது மட்டுமே ஆகும் கமலேஷ் நாகர்கோடி 3.2 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த வருடமே அவருக்கு காயம் ஏற்பட்டது.

- Advertisement -

இரண்டு வருடங்கள் தொடர்ந்து முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த இரண்டு வருட காலகட்டத்தில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தான் இவருக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. அவர் மட்டும் உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால் கமலேஷ் நாகர்கோடி கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று கூறினால் அது மிகையல்ல.

இந்த விடயத்தை அவரது இளம்வயது பயிற்சியாளர் சுரேந்திர ரத்தோர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்… ஒரு கட்டத்தில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த கமலேஷ் நகர்கோடியின் நிலைமையினை பி.சி.சி.ஐ யின் கவனத்திற்க்கு கொண்டு சென்று அவர்களின் உதவியுடன் நாகர்கோடியை இங்கிலாந்துக்கு அனுப்பி காயத்திற்கான ஆபரேஷன் உதவிகளை ராகுல் டிராவிட் செய்தார்.

Nagarkoti 2

அந்த ஆபரேஷனுக்கு நடந்து நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் உலகத்திற்கு திரும்பியிருக்கிறார். ஊரடங்கு சமயத்தில் நன்றாக பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு உதவ ராகுல் டிராவிட் மட்டும் இல்லை என்றால் கமலேசின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அவரது இளம்வயது பயிற்சியாளர் சுரேந்திர ரத்தோர்.

Advertisement