இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே 231 ரன்களை தொட முடியாமல் தோற்ற இந்தியா 3வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அதனால் 27 வருடங்கள் கழித்து இலங்கையிடம் ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த தோல்விக்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிரடியான முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்த அவர் தனது கடைசி ஒருநாள் போட்டிகள் சதமடித்த சஞ்சு சாம்சன், ருதுராஜ் போன்றவர்களை தேர்ந்தெடுக்கவில்லை.
3 போட்டிக்கு முன்:
அத்துடன் பேட்டிங் வரிசையில் 4, 5வது விளையாடக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை அவர் 6, 7வது இடத்தில் களமிறங்கியது தோல்விக்கு காரணமானது. அதற்கு ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் 3வது போட்டியில் அவர் மொத்தமாக கேஎல் ராகுலை நீக்கினார். குறிப்பாக அப்போட்டியில் சிவம் துபே நீக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் துபேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த அவர் கேஎல் ராகுலை கழற்றி விட்டார். இந்நிலையில் கடந்த 2023 டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. ஆனால் அடுத்த 3 போட்டிகளில் அவருக்கு அணியில் இடமே இல்லாதது ஆச்சரியமளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக சிவம் துபே, ரியான் பராக் ஆகியோருக்காக ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காதது பைத்தியக்காரத்தனம் என்று அவர் கம்பீரை மறைமுகமாக சாடியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பைத்தியக்காரத்தனமான உலகில் தான் நீங்கள் வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சிவம் துபே, ரியான் பராகை தேர்ந்தெடுப்பீர்கள்”
இதையும் படிங்க: அந்த 3 பேரையும் இம்ப்ரெஸ் பண்ண ரியான் பண்ண மேட்ச் வின்னரா வருவாரு.. வாழ்த்திய விராட் கோலி
“அணியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 3 ஒருநாள் போட்டிகளுக்கு முன்பாக அவர் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார். ஆனால் திடீரென ஒரு சுமாரான போட்டியால் அவர் பிளேயிங் லெவனிலேயே இல்லை. இது ஒரு அபத்தமான குறை கூறல்” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் முதல் சுற்றுப் பயணத்திலேயே கம்பீர் கடுமையான விமர்சனங்களை சந்தித்த துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



