அவரு பவுலிங் போட்டா ரொம்ப அடி வாங்குவாரு. அதான் அவருக்கு சான்ஸ் கொடுக்கல – சி.எஸ்.கே கோச் பிளெமிங்

Fleming
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து பல பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை இந்த 4 வாரங்களும் பெரிய அளவில் வெற்றிகரமாக அமையவில்லை. ஏனெனில் கேப்டன் எம்எஸ் தோனி பதவி விலகிய நிலையில் அனுபவமில்லாத புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் இந்த வருட தொடரை துவங்கிய அந்த அணி முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

CSK-1

- Advertisement -

இருப்பினும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை போராடிப் பெற்ற அந்த அணி அதன்பின் குஜராத்துக்கு எதிராக தோற்று பரம எதிரியான மும்பைக்கு எதிராக வென்று மீண்டும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மண்ணை கவ்வியது. தற்போதைய நிலைமையில் 8 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்த 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒருவேளை அப்படி 6 தொடர் வெற்றிகளை பெற்றாலும் கூட நாக் அவுட் சுற்றுக்கு உறுதியாக செல்லும் என்பது 90% சந்தேகம்தான்.

ராஜவர்தனுக்கு இடமில்லை:
இந்த தொடர் தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங்கை விட சென்னையின் மோசமான பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. 14 கோடிக்கு நம்பி வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகிய நிலையில் இதர பவுலர்களில் டுவைன் பிராவோ தவிர ஏனைய அனைவரும் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக கையிலிருந்த வெற்றிகளைக் கூட எதிரணிக்கு பரிசளித்தது சென்னை அணி ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Rajvarthan Hangarekar

தீபக் சஹருக்கு பதில் வேறு நல்ல இந்திய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் – ரவுண்டராக இடம்பெற்றிருந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்தது ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் வாயில் விசில் வைத்துக்கொண்டு கையில் சென்னையின் கொடியை பிடித்துக்கொண்டு ரசிகர்களோடு ரசிகர்களாக காட்சி அளித்த அவரைப் பார்த்த ரசிகர்கள் இதற்காகவா 1.5 கோடி கொடுத்து வாங்கினீர்கள் என்று சென்னை அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

- Advertisement -

பிளெமிங் பதில்:
இந்நிலையில் ரசிகர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார். இது பற்றி சிஎஸ்கே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. அவர் (ராஜ்வர்தன்) அண்டர்-19 உலகக்கோப்பை அளவில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு தெரியும். ஆனால் இது (ஐபிஎல்) அவருக்கு வெறும் ஆரம்ப கட்டமாகும். அவரின் திறமைகளை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றாலும் உடனடியாக ஐபிஎல் தொடருக்குள் அவரை தள்ளிவிட்டு சேதப்படுத்த விரும்பவில்லை. அவரின் முழு திறமையை முதலில் நாங்கள் உணர விரும்புகிறோம்”

Fleming

“அவர் தற்போது எங்களது அணியில் சிறப்பாக இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் ஒருசில மிகப்பெரிய போட்டிகளில் (அண்டர்-19) விளையாடியுள்ளார். இருப்பினும் இந்த வருடம் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பளிப்போம். அவரிடம் நல்ல வேகம் இருந்தாலும் அதை ஐபிஎல் போன்ற மிகப் பெரிய அரங்கில் சரியாக பயன்படுத்துவது முக்கியம். எனவே அவரைப் போன்ற ஒரு தரமான வீரரின் திறமையை வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் ட்வயன் ப்ராவோ போன்ற தரமான பவுலர்கள் கூட அவ்வப்போது அடி வாங்கும் நிலையில் அண்டர்-19 உலக கோப்பை அளவில் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட ராஜ்வர்தனுக்கு உடனடியாக வாய்ப்பளித்தால் அவர் பந்து வீச்சில் அடி வாங்குவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

Hangargekar 1

அப்படி நடந்தால் இந்த இளம் வயதிலேயே மனமுடைந்து அவரின் திறமை வீணாகி விடும் எனக்கூறும் அவர் அதன் காரணமாகவே பெஞ்சில் அமர வைத்துள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த வருடமே காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால் அவருக்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நான் ஆசைபட்டு விளையாடணும்னு நெனைக்குற இடம் இதுதான். அதுதான் என் கனவு – ஹர்டிக் பாண்டியா ஓபன்டாக்

ஆனால் நிறைய அணிகள் அவரை விட அனுபவம் இல்லாத இளம் வீரர்களை களமிறக்கி அதில் வெற்றியும் கண்டு வருகின்றது. அப்படிப்பட்ட நிலையில் முதலில் அவரை போன்ற இளம் வீரருக்கு ஒரு வாய்ப்பளித்தால் தானே அவரின் செயல்பாடு எப்படி என்று தெரியும். அதை விட்டுவிட்டு வாய்ப்பு கொடுக்காமலேயே அடி வாங்கி விடுவார் என்று கூறுவது ஆரம்பத்திலேயே அந்த இளம் வீரரின் திறமையை மீது நம்பிக்கை வைக்காமல் மட்டம் தட்டுவதை போல் உள்ளதாக பிளம்பிங்கின் இந்த கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement