டி20ல தடுமாறக்கூடிய டெஸ்ட் பவுலரான அவருக்கு எதுக்கு 20 ப்ளஸ் கோடி.. தனது நாட்டு வீரர் பற்றி ஜேசன் கில்லஸ்பி

Jason Gillespie
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ் ஆகியோர் 20 கோடிக்கும் மேல் வாங்கப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்ற பட் கமின்ஸ் 20.50 கோடிகளுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்த அவர் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையும் படைத்தார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மற்றொரு நட்சத்திர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.

- Advertisement -

எதுக்கு இவ்வளவு கோடி:
அதனால் பட் கமின்ஸ் படைத்த சாதனையை அடுத்த ஒரு மணி நேரத்தில் உடைத்த மிட்சேல் ஸ்டார்க் ஒரே நாளில் 24.75 கோடிகளுக்கு அதிபரானார். இருப்பினும் தோனி, விராட் கோலி போன்ற இந்திய ஜாம்பவான்கள் கூட 15 கோடிக்கும் குறைவான சம்பளத்துக்கு விளையாடும் நிலையில் சமீப காலங்களாக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த இந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படக்கூடிய பட் கமின்ஸ் டி20 கிரிக்கெட்டில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் அல்ல என்பது தெரிந்தும் 20.50 கோடிக்கு வாங்கப்பட்டது தமக்கே ஆச்சரியத்தை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார் இது பற்றி சென் ரேடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “கமின்ஸ் தரமான பவுலர் மற்றும் கேப்டன் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் டி20 அவருக்கான சிறந்த ஃபார்மட் என்று நான் கருதவில்லை”

- Advertisement -

“என்னை பொறுத்த வரை அவர் சிறந்த டெஸ்ட் பவுலர் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அவர் அபாரமாக செயல்படக் கூடியவர். டி20 கிரிக்கெட்டிலும் அவர் நல்ல பவுலர் தான். ஆனால் அதற்காக இந்த தொகைக்கு வாங்கப்பட்டது அதிகப்படியானது என்று நான் கருதுகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய டெஸ்ட் மற்றும் 50 ஓவர் தொடர்களில் கமின்ஸ் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று காட்டினார்.

இதையும் படிங்க: முதல் கப் ஜெயிக்க ஆர்சிபி’க்கு வாங்க.. ரசிகர் அழைப்புக்கு தோனி கொடுத்த பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

அதை அடிப்படையாக வைத்து சம்பந்தமின்றி டி20 கிரிக்கெட்டில் அதுவும் எவ்வளவு பெரிய தொகைக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கியுள்ளது உண்மையாகவே சுமாரான முடிவு என்று சொல்லலாம். மேலும் வரலாற்றில் பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு கடைசியில் சொதப்பலாக செயல்பட்டு அடுத்த வருடமே கழற்றிவிட்ட கதைகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement