IND vs WI : சிறப்பாக செயல்பட்டும் பயனில்லை, அஷ்வினுக்கு டி20 உ.கோ வாய்ப்பு கிடைக்காது – முன்னாள் வீரர் பரபர கருத்து

Ravichandran Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மனையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 29-ஆம் தேதியான நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190/6 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (44) ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் சூர்யகுமார் யாதவ் 24 (16), ஸ்ரேயாஸ் அய்யர் 0 (4), ரிஷப் பண்ட் 14 (12), ஹர்திக் பாண்டியா 1 (3), ரவீந்திர ஜடேஜா 16 (13) என அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

Dinesh Karthik Ashwin

- Advertisement -

அதனால் தடுமாறிய இந்தியாவை கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனக்கே உரித்தான பாணியில் சரவெடியாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15 (6), சமர் ப்ரூக்ஸ் 20 (15) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அஷ்வின் கம்பேக்:
அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணியை மிடில் ஆர்டரில் காப்பாற்ற வேண்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 (15), ரோவ்மன் போவல் 14 (17), சிம்ரோன் ஹெட்மையர் 14 (15) என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டானதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Ashwin-3

முன்னதாக இந்த தொடரில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 மாதங்கள் கழித்து வெள்ளைப்பந்து அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 2010 முதல் தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்த அஷ்வினை தோனி கேப்டனாக ஓய்வுபெற்ற 2017இல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஒருசில போட்டிகளில் சுமாராக பந்துவீசினார் என்பதை காரணம் காட்டி மொத்தமாக கழற்றி விட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் யாருமே எதிர்பாராத வகையில் 4 வருடங்கள் கழித்து தேர்வாகி வாய்ப்பு பெற்ற குறைவான போட்டிகளிலும் அசத்தலாக பந்து வீசினார்.

- Advertisement -

எந்த பயனுமில்லை:
அதன்பின் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் அசத்திய அவர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜனவரியில் நடந்த ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்த போதிலும் அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் அவரை கண்டு கொள்ளாத தேர்வுக்குழு தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்துள்ளது.

Ashwin

அந்த நிலையில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 5.5 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசியதுடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் 13* (10) ரன்கள் குவித்து தினேஷ் கார்த்திக்குடன் 52 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு பங்காற்றினார்.

- Advertisement -

ஆனால் இப்படி சிறப்பாக செயல்பட்டாலும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். குல்தீப் யாதவ், சஹால், பிஷ்னோய் போன்ற வேரியேஷன் தெரிந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

patel

“அடுத்த போட்டியில் 2 சுழல் பந்துவீச்சாளர்களை மட்டும் இந்தியா தேர்வு செய்தால் அஸ்வினை விட்டுவிட்டு பிஷ்னோய் விளையாடுவதை பார்க்க முடியும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் டி20 உலக கோப்பையில் அஸ்வின் விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை. ஏனெனில் சஹால், பிஸ்னோய், குல்தீப் போன்ற வேரியேஷன் தெரிந்த அட்டாக் செய்யக்கூடிய பவுலர்கள் தான் நான் விரும்புகிறேன். அதை அஷ்வின் உங்களுக்கு செய்து கொடுக்க மாட்டார். இந்திய மண்ணில் கூட 3 சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியாது” என்று கூறினார்.

இருப்பினும் அவர் கூறிய பந்துவீச்சாளர்கள் சமீப காலங்களில் சொதப்பிய காரணத்தாலேயே 2021 உலக கோப்பையில் அஷ்வின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பதே நிதர்சனம். மேலும் வித்தியாசமாக யோசித்து பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யும் வகையில் பந்து வீசக்கூடிய அஷ்வின் பேட்டிங்கிலும் கணிசமாக ரன்கள் சேர்க்க கூடியவர். அப்படிப்பட்ட நிலையில் பார்த்தீவ் பட்டேல் கூறும் இந்த கருத்துக்கு பல ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement