IND vs ENG : உம்ரான் மாலிக்கை டி20யில் தேர்வு செய்திருக்கவே கூடாது – மொதல்ல அவருக்கு இந்த டெஸ்ட்ட வைங்க

Rohit-and-Umran
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சமீபத்திய டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று லண்டனில் துவங்குகிறது. முன்னதாக இந்த டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியதால் சம்பிரதாய 3-வது போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Umran Malik

- Advertisement -

ஆனால் அந்த முடிவு இறுதியில் இந்தியாவிற்கு தோல்வியை தான் பரிசளித்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் சரவெடியாக 215/7 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்த ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரைத் தவிர எஞ்சிய 3 பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் மட்டுமே வீசிய உம்ரான் மாலிக் 4 ஓவரில் 1 விக்கெட்டை எடுத்தாலும் அரைசதம் அடித்து வள்ளலாக 56 ரன்களை வாரி வழங்கினார்.

அவசரப்பட்டதா இந்தியா:
கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் அசத்தியதால் இந்த வருடம் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி 22 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பவுலராக சரித்திர சாதனை படைத்தார். இந்த அளவுக்கு வேகத்தில் பந்து வீசும் ஒருவர் இந்திய அணியில் இல்லாத காரணத்தாலும் இவரின் வேகத்துக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும் என்பதாலும் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர்.

IND vs IRE Umran Malik

ஆனால் வேகத்துக்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கும் இவரை தொடர்ச்சியாக 2 – 3 வருடங்கள் சிறப்பாக செயல்படாமல் இந்திய அணியில் அவசரப்பட்டு தேர்வு செய்யக்கூடாது என்று கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களும் கேட்டுக் கொண்டனர். அந்த நிலைமையில் சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய்ப்பு கொடுக்காத நிலையில் அயர்லாந்தில் நடந்த டி20 தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் வாய்ப்பு கொடுத்தனர்.

- Advertisement -

டி20கு செட்டாகமாட்டார்:
அதில் முதல் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கிய அவர் 2-வது போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவுக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தார். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை 12.44 என்ற படுமோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கும் பலவுராகவே செயல்பட்டுள்ளார்.

Umran Malik

இந்நிலையில் உம்ரான் மாலிக் போன்ற எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்பாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் மதன் லால் அதுதான் அவரைப் போன்ற பவுலரை உறுதியானவராக மாற்றக்கூடிய கிரிக்கெட் என்று கூறியுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு தலைவரான அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரை டி20 கிரிக்கெட்டில் விளையாடாதீர்கள். டெஸ்ட் போட்டிக்கு கொண்டு வந்து கடினப் படுத்துங்கள். அவர் நல்ல பவுலர் ஆனாலும் அவரை இன்னும் நல்ல பவுலராக நீங்கள் உருவாக்க வேண்டும். அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளித்து தொடர்ச்சியாக 10 – 15 ஓவர்கள் வீச வைத்தால் தான் விக்கெட்டுகள் எடுப்பது எப்படி என்பதை புரிய வைக்க முடியும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரை சரமாரியாக அடிக்க பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர். ஏனெனில் அவரின் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு ஏற்றவாறு அழகாக வருகிறது”

Madan-Lal

“நான் ஏற்கனவே கூறியது போல் விக்கெட்டுக்கள் எடுக்காமல் பந்தை ஸ்விங் செய்யாமல் வேகத்தை மட்டும் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. தற்போது கொஞ்சமும் அனுபவமற்றவராக அவருக்கு தேவையான அனைத்து அனுபவமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக அவரை டி20 அணியில் சேர்த்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஓப்பனிங் வேணாம். ரிஷப் பண்ட் அந்த இடத்தில் களமிறங்கினால் தான் அடிச்சி நொறுக்குவாரு – பாக் வீரர் கருத்து

ஆரம்பத்தில் நேரடியாக டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யுங்கள் என்று கேட்கும் அளவுக்கு இருந்த உம்ரான் மாலிக் தற்போது வேகத்தில் விவேகத்தை புகுத்த தவறியதால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது சந்தேகமாகியுள்ளது.

Advertisement