இந்தியா எப்படி போன எனக்கென்ன.. நான் 2024 டி20 உ.கோ பாக்கமாட்டேன்.. இதான் காரணம்.. ரியான் பராக்

Riyan Parag 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

அந்த வகையில் இந்த தொடரில் எதிரணிகளை வீழ்த்தி இந்தியா கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. சொல்லப்போனால் தோனி தலைமையில் இந்தியா முதலும் கடைசியுமாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் 17 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வருகிறது.

- Advertisement -

சர்ச்சை கருத்து:
அதனால் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா வென்றாலும் தோற்றாலும் தாம் கவலைப்படப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“செமி ஃபைனலில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்”

- Advertisement -

“ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை” என்று கூறினார். அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடா விட்டாலும் நமது நாடு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று ஐபிஎல் முடிந்ததும் சுப்மன் கில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஆடம் ஜாம்பாவே முடிச்சு விட்ருவாரு.. விராட் கோலியை பாத்தீங்கன்னா இந்தியா தோத்துடும்.. எச்சரித்த ஹைடன்

அதே போல ரோகித் சர்மாவின் படைக்கு வீட்டிலிருந்து நான் ஆதரவு கொடுப்பேன் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement