ஆடம் ஜாம்பாவே முடிச்சு விட்ருவாரு.. விராட் கோலியை பாத்தீங்கன்னா இந்தியா தோத்துடும்.. எச்சரித்த ஹைடன்

Matthew Hayden
- Advertisement -

அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அயர்லாந்தை முதல் போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தானை சந்திக்கிறது. முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே ஆர்சிபி அணியை போலவே இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் துவக்க வீரராக களமிறங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என்று சௌரவ் கங்குலி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த இருவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

ஹைடன் எச்சரிக்கை:
எனவே எதிரணிக்கு சவாலை கொடுக்க வேண்டுமெனில் ஜெய்ஸ்வால் – ரோஹித் ஆகிய இடது வலது கை பேட்ஸ்மேன்கள் தான் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ரோஹித் சர்மா – விராட் கோலி என ஆரம்பத்திலேயே வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் ஆடம் ஜாம்பா போன்ற ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகள் இந்தியாவை வீழ்த்தி விடும் என்று மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.

எனவே விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் பற்றி பார்க்காமல் இந்தியாவின் வெற்றியைப் பற்றி யோசிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் சேர்க்கையை கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 5 பேட்ஸ்மேன்களும் தொடர்ச்சியாக வலது கை வீரர்களாக வைத்திருக்கக் கூடாது”

- Advertisement -

“அப்படி வைத்திருந்தால் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆடம் ஜாம்பாவுக்கு ஹலோ சொல்வார்கள். எனவே அற்புதமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் அல்லது அவர் என்னுடைய அணிக்காக விளையாட வேண்டாம். ரோஹித் சர்மா பல பரிணாமங்களை கொண்ட வீரர். அதனால் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு அவர் எப்போதும் கூச்சப்படுவதில்லை”

இதையும் படிங்க: வெறும் 1 ரன்.. பதம் பார்த்த ரன்ரேட்.. தெ.ஆ வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்த பாலாஜி.. டி20 உ.கோ ரீவைண்ட்

“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் நம்பர் 4வது இடத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அதனால் இம்முறை அவர் மிடில் ஆடரில் களமிறங்கி தொடரை துவக்குவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார். முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி விளையாடவில்லை. அதனால் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி யார் என்பது இன்னும் குழப்பமாகவே இருந்து வருகிறது.

Advertisement